June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; நாதக டெபாசிட் இழந்தது

1 min read

DMK wins Erode by-election; Nataka loses deposit

8.2.2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 12ம் சுற்று முடிவில், தி.மு.க., வேட்பாளர் 89.931 ஓட்டுக்கள் பெற்று, முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 19,078 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
கடைசியாக கிடைத்த தகவலின் படி தி.மு.க. 1,17.158 வாக்குகளும். நாம் தமிழர் கட்சி 23,872 வாக்குகளும் பெற்று இருந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க, தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5ம் தேதி, அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது.
மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று நடந்தது. மொத்தம் 17 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் 1,14,439 ஓட்டுகள் பெற்று வெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 23, 810 ஓட்டுகள் டெபாசிட் இழந்தார்.

சுற்று வாரியாக முன்னிலை நிலவரம் பின்வருமாறு:

முதல் சுற்று

தி.மு.க.,- 8,025 ஓட்டுக்கள்

நாம் தமிழர் கட்சி- 1,081 ஓட்டுக்கள்

இரண்டாம் சுற்று

தி.மு.க., – 11,140 ஓட்டுக்கள்

நாம் தமிழர்- 1,081 ஓட்டுக்கள்

மூன்றாம் சுற்று

தி.மு.க., -24,812 ஓட்டுக்கள்

நாம் தமிழர்- 3,518 ஓட்டுக்கள்

நான்காம் சுற்று

தி.மு.க., – 30,657 ஓட்டுக்கள்

நாம் தமிழர்- 5,954 ஓட்டுக்கள்

ஐந்தாம் சுற்று

தி.மு.க., – 37,001 ஓட்டுக்கள்

நாம் தமிழர்- 7688 ஓட்டுக்கள்

6ம் சுற்று

தி.மு.க.,- 36,880

நாம் தமிழர் கட்சி- 7,668

7ம் சுற்று
தி.மு.க.,- 43,427

நாம் தமிழர் கட்சி- 9,152

8ம் சுற்று
தி.மு.க.,- 57,600

நாம் தமிழர் கட்சி- 12,840
ஒன்பதாம் சுற்று
தி.மு.க.,- 60,513

நாம் தமிழர் -12,740

10ம் சுற்று

தி.மு.க.,- 63,984

நாம் தமிழர் -13,945

நோட்டா- 2,940

11ம் சுற்று

தி.மு.க., -76,278

நாம் தமிழர்-16,543

12ம் சுற்று

தி.மு.க., – 83,191

நா.த.க., – 17,689

நோட்டா – 4,304

13ம் சுற்று

தி.மு.க., – 89.931

நா.த.க., – 19,078

14ம் சுற்று

தி.மு.க., – 96,450

நா.த.க., – 20,384

15ம் சுற்று

தி.மு.க., – 1,02,544

நா.த.க., – 21,802

நோட்டா – 5,474

கடந்த தேர்தலில்…!
கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன்- 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.