தென்காசி மாவட்டத்தில் 43 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min read
District Collector informs to obtain permission to operate mini buses on 43 routes in Tenkasi district
9.2.2025
தென்காசி மாவட்டத்தில் 43 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதலில் தெரிவிக்கப்பட்டுள்ள 43 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
அதன்படி தென்காசி புதிய பஸ் நிலையம் முதல் இடைகால் வரை, தென்காசி புதிய பஸ் நிலையம் முதல் பூவனூர் வரை, தென்காசி புதிய பஸ் நிலையம் முதல் மத்தளம்பாறை ஸோஹோ வரை, தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை,
தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் இடைகால் வரை குற்றாலம் முதல் செங்கோட்டை வரை பண்பொழி முதல் ஆய்க்குடி வரை தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் வேலாயுதபுரம் வரை கொடி குறிச்சி முதல் ஆய்க்குடி மேலூர் வரை சம்பவர் வடகரை முதல் தென்காசி புதிய பேருந்து நிலையம் வரை தென்காசி பேருந்து நிலையம் முதல் பண்பொழி வரை புளியரை பேருந்து நிலையம் முதல் திருமலை கோவில் வரை தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் குற்றாலம் வரை தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் பழைய குற்றாலம் வரை தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் மத்தளம் பாறை வரை கடையநல்லூர் முதல் பங்களா சுரண்டை வரை பாவூர்சத்திரம் முதல் பங்களா சுரண்டை வரை,
மேலும் ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் கடையம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் கீழப்பாவூர் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் பாப்பான்குளம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் தீர்த்தாரப்பபுரம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் வடமலைப்பட்டி வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் காசிநாதபுரம் வரை, ஆலங்குளம் காமராஜர் சிலை முதல் மேலகிருஷ்ணப்பேரி வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் வள்ளியம்மாள்புரம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் ஆழ்வார்குறிச்சி கல்லூரி வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் கடையம் வரை, ஆலங்குளம் அரசு கல்லூரி முதல் அய்யனார்குளம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் பாவூர்சத்திரம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் வள்ளியம்மாள்புரம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் பாப்பான்குளம் வரை, ஆலங்குளம் பேருந்து நிலையம் முதல் கடையும் வரை,
சங்கரன்கோவில் பகுதியில் ஒப்பனையாள்புரம் முதல் முறும்பு வரை, கீழத்திருவேங்கடம் முதல் துலுக்கன் குறிச்சி வரை, சிவகிரி பஸ் நிலையம் முதல் வடுகப்பட்டி வரை, ஆட்கொண்டார்குளம் முதல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை வரை, சிங்கிலி பட்டி முதல் கருப்பாநதி அணை வரை, கரிவலம்வந்தநல்லூர் முதல் ராமலிங்கபுரம் வரை, மேல கலங்கல் முதல் குருக்கள்பட்டி வரை, கீழக்கலங்கல் முதல் பனவடலிசத்திரம் வரை, புளியங்குடி பேருந்து நிலையம் முதல் மலையடிகுறிச்சி வரை, வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் முதல் திருமலாபுரம் வரை, சிந்தாமணி பேருந்து நிலையம் முதல் தலையணை வரை,
மேற்கண்ட 43 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூபாய் 1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் 10.02.2025 முதல் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.