கடையநல்லூரில் நவாஸ்கனி எம்.பி.க்கு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
1 min read
Hindu Front protests against Navaskani MP in Kadayanallur
9.2.2025
கடைய நல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியின் 46ம் ஆண்டு ஆலிம் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி பங்கேற்று பேசியதாவது:
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து முழுமையாக பேச நான் தயாராக இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை எந்த நிலையிலும் எந்த மதத்தினரையும் தவறாக பேசியது கிடையாது. பிறர் மனம் புண்படும்படி நடந்தது கிடையாது. வக்பு வாரிய தலைவர் என்ற முறையில், நடை முறையில் இருந்ததை தொடருங்கள் என்று மட்டும்தான் கேட்டேன்.
ஆனால் அதை திரித்து ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்படுத்துவது, இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.வக்பு வாரிய சொத்துக்களை சட்டத்தின் மூலமாக அபகரிக்க முயலும் மத்திய அரசின் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை தோற்க டிப்பதற்கான திட்டங்களை முஸ்லிம்லீக் மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமலேயே மத்திய அரசு செயல்படுகிறது.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்
பட்டால் வக்பு வாரியத்தின் அதிகாரம் மற்றும் சொத்துக்கள் பறிபோகும்.
மத்திய அரசு இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக பாதிப்படைய செய்வதற்காகவே இந்த சட்டத்தை கொண்டு வருகிறது. மேலும் சட்ட ரீதியாக இதை எதிர் கொள்ளவும், முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், மாநில செயலாளர் மஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடையநல்லூரில் நவாஸ் கனி எம்பி வருகையை கண்டித்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட பாஜ, இந்து முன்னணியினர் 16 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட் டம் கடையநல்லூரில் வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்பியின் வருகையை கண்டித்து பாஜ, இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட கடையநல்லூர். இந்து முன்னணி நகர செயலாளர் திருப்பதி சீனிவாசன், துணை தலைவர் கண்ணன், பாஜ
நகர தலைவர் சுப்பிரமணியன், மாரி, கவுன்சிலர் சங்கரநாரா யணன், முருகன், ஐடி விங்க் காளிமுத்து, கார்த்திக், ஓபிசி அணி கண்ணன், இளைஞரணி விவேக், நகர துணை தலைவர் காளிராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, கந்தசாமி, ஒன்றிய அரசு பிரிவு பாலசுப்பிரமணியன், முத்துமாரியப்பன், ஒன்றிய பொதுச்செயலா ளர் செல்வராஜ், இந்து ஆட்டோ முன்னணி காளிராஜ், சூர்யா உள்ளிட்ட 16 பேர்களை சங்கரன் கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவழகன், கடையநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் க.ஆடிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.