தோரணமலையில் தைப்பூசம்- திருக்கல்யாணம்
1 min read
Thaipusam- Thirukalyanam at Thoranamalai
13.2.2025
தென்காசி மாவட்டம் தென்காசி – கடையும் சாலையில் மாதாபுரம் பகுதியில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா மற்றும் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி-கடையம் சாலையில் மாதாபுரம் பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திரு விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.45 மணிக்கு சிறப்பு அபி ஷேகம்,அலங்காரத்தை தொடர்ந்து வள்ளி, தெய் வானை சமேத சுப்பிரம ணிய சுவாமி திருக்கல் யாணம் நடைபெற்றது.
இந்த திருமணம் சீர்வரிசை கொண்டு வருதல், மாப்பி்ள்ளை அழைப்பு, எதிர்சேவை மாங்கல்யம் அணிவித்தல், தாரைவார்த்தல் என சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காலை 7.45 மணிக்கு தொடர் அன்ன தானத்தை பரம்பரை அறங் காவலர் ஆதிநாராயணன் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர்.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஊட்டிபடுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம், மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. 12.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் குடும் பத்தினர் கவுரவிக்கப்பட் டனர். மதியம் 2 மணிக்கு முத்துமாலைபுரம் ஆதிநா ராயணன்- சந்திரலீலா நினைவு இலவச படிப்பக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 6 மணிக்கு சரவண ஜோதி பூஜை, இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாண வியரின் கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. தொடர்ந்து சுப்பிரமணியர். வள்ளி, தெய்வானை வீதி உலா நடந்தது.
முன்னதாக தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி திரவியநகர் மத்தளம்பாறை, புல்லுக் காட்டுவலசை, மடத் தூர், முத்துமாலைபுரம், ஐயனூர், சிவநாடானூர், ஆரியங்காவூர், கல்லூ ரணி, பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப் பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், மைலப்ப புரம், சின்னக்குமார்பட்டி, வெங்காடம்பட்டி, அரியப்பபரம் ஆகிய கிராமங்களில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடை பெற்றது.
தைப்பூசதிருவிழாவில் பாவூர்சத்திரம், சுரண்டை, தென்காசி, கடையம், ஆலங்குளம், விக்கிரமசிங்கபுரம் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தோரண மலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் சிறப்பாக செய்திருந்தார்.