குற்றாலம் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா
1 min read
Theppa Utsava festival at Courtallam temple
13/2/2025
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
குற்றாலம் திருக்குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
அதன்படி நேற்று காலையில் இலஞ்சி குமரன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் திருவிலஞ்சி குமாரரை குற்றாலநாதர் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்பாள், திருவிலஞ்சி குமரன், வள்ளி, மேல தாளங்கள் முழங்க குற்றாலநாதர் கோவிலில் இருந்து சித்தர சபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாதாரணை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் சுவாமி அம்பாள், திருவிலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை, மூங்கில் பிரம்பினால் வடிவமைக்கப்பட்ட கொடுங்கை விமானத்தில் எழுந்தருளி நீராலி மண்டபத்தை 11 முறை சுற்றி வரும் வைபவம் நடைபெற்றது. அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவனடியார்களின் சிவ பூத கனவாத்தியங்களும் இசைக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன் திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன் அகஸ்தியர் சன்மார்க்க சபை நிர்வாகி முத்துக்குமாரசாமி சொக்கம்பட்டி ஜமீன்தார் பெரிய அனஞ்சி தேவர், சின்ன அனஞ்சி தேவர் வம்சாவழியினர், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குற்றாலம் டி ஆர் கிருஷ்ணராஜா, தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள் மாடசாமி ஜோதிடர், பாஜக நிர்வாகி செந்தூர் பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் காவையா, ராஜ் மெஸ் வேல்ராஜ், மற்றும் தென்காசி குற்றாலம் செங்கோட்டை வட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் பணியாளர்கள் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.