பிரான்ஸ், அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்த மோடி நாடு திரும்பினார்
1 min read
Modi returns home after France, US tour
15.2.2025
ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பினார்.
பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ம் தேதி அந்நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் சந்தித்து பேசினார்.
பின்னர் தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். தலைநகர் வாஷிங்டனில் அவருக்கு அரசு சார்பிலும், அங்கு வாழும் இந்தியர்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வாட்ஸ், தேசிய புலானய்வுப்பிரிவு இயக்குனர் துளசி கப்பாட், கோடீஸ்வரர் எலான் மஸ்க், ஆளும் குடியரசுக்கட்சி தலைவர் விவேக் ராமசாமி என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டார். தனி விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி நள்ளிரவில் நாடு திரும்பினார். டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.