பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு
1 min read
New provision to prevent changing the front page of the answer sheet for public examinations
19/2/2025
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக புதிய நடைமுறையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டுள்ளது.
மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்றி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விடைத்தாளில் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள்களின் பராமரிப்புப் பணிகளை நேரடியாக மேற்கொள்ளவுள்ளது.
விடைத்தாளின் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும் முகப்புப் பக்கத்தை இதுவரை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.
ஆனால், தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாவட்டம் தோறும் மையங்கள் அமைத்து விடைத்தாள்களுடன் அதன் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
பொதுத் தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு, முகப்புப் பக்கத்தை அகற்ற முடியாத வகையில் வழங்கப்பட உள்ளது.