ரூ. 21 லட்சம் கையாடல் தென்காசி நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்
1 min read
Tenkasi Municipality employee suspended for handling Rs. 21 lakhs
21.2.2025
தென்காசி நகராட்சியில் டெண்டர் வைப்புத் தொகையை கையாடல் செய்த இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளர் ராஜா முகமது. 2023 மார்ச் முதல் 2024 மார்ச் 31 வரை உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தணிக்கையில் டெண்டர் வைப்புத்தொகையில் ராஜாமுகமது ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 890 ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். ராஜா முகமது இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.