இரட்டை இலை விவகாரம்: தேர்தல் கமிஷனில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
1 min read
Two Leaves Issue: Edappadi Palaniswami’s Reply Filed in Election Commission
21.2.2025
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் விசாரணையை தொடரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இந்தநிலையில் இந்திய தேர்தல் கமிஷனில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், சூரியமூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை. தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர். அவருக்கு அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது.
உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதுகுறித்து சிவில் கோர்ட்டில்தான் முறையிட வேண்டுமே தவிர, தேர்தல் கமிஷனில் முறையிட முடியாது. எனவே சூரியமூர்த்தி மனுக்களை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.