முதல்-அமைச்சர் வேட்பாளர் பற்றி பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – அண்ணாமலை பேட்டி
1 min read
We will talk about the Chief Ministerial candidate when the time comes – Annamalai Interview
7.3.2025
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி; பா.ஜ.க. நோட்டா கட்சி; பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை ஒவ்வொரு பா.ஜ.க. தலைவர்களும், தொண்டர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். இன்று பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை எனும் சூழலை இரவு, பகலாக வேலை செய்து தொண்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
எந்த கட்சியையும், எந்த தலைவரையும் நான் சிறுமைப்படுத்தி பேசவில்லை. இன்று அந்த நிலைமையில் பா.ஜ.க. இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறோம்.
எந்த கட்சியோடு கூட்டணி? தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்? யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. எங்களுடைய நோக்கம் பா.ஜ.க. நிலைக்க வேண்டும். சரியான நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவோம். தேசிய தலைவர்கள் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.