June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.வை குறிப்பிடவில்லை – அண்ணாமலை விளக்கம்

1 min read

AIADMK not mentioned – Annamalai explanation

8.3.2025
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள்” என்று கூறினார். அண்ணாமலை அ.தி.மு.க.வை குறிப்பிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்தது.

அண்ணாமலை பேசியது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை குறிப்பிட்டாரா? தவறாக பேசக்கூடாது. பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அ.தி.மு.க.வை அல்ல. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கட்சி தொடங்கியது முதல் இன்று வரை எந்த கட்சியிடமும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரிந்திரம் கிடையாது’ என்று கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
டிவியில் இரவு 7 – 9 வரை நடக்கும் விவாதங்களுக்கு ( டிபேட்) அரசியல் விமர்சகர், எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என இரண்டு பேரை கொண்டு வந்து அமர வைத்து நான் சொன்னதையும், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., சொன்னதையும் திரித்து பேசுகிறீர்கள். நேற்று நான் பேசியதில் அ.தி.மு.க.,வை குறிப்பிடவில்லை. பா.ஜ.கவின் நிலையைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். அ.தி.மு.க., பற்றி இ.பி.எஸ்., பேசுகிறார். இது நியாயம் தானே.
டிவியில் நடக்கும் விவாதங்களை நான் பார்ப்பது கிடையாது. அதில், விவாதத்தில் அமர்பவர்களுக்கு களத்தில் நடப்பது என்ன தெரியும். அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் சென்று பா.ஜ.க.வை திட்டுவதையே வேலையாக வைத்து உள்ளனர். பத்திரிகையாளர்கள் என பலர் பேசுகின்றனர். அவர்கள் யார்?
அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுகிறார்களா? அவர்களுக்கு தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு எந்த மாதிரி கூட்டணி அமைய வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கு நானும், இ.பி.எஸ்.,சும் எப்படி தொடர்ந்து பேச முடியும்.
பத்திரிகையாளர்களுக்கு களத்தில் நடப்பது தெரியும். விவாதத்தில் அமர்பவர்களுக்கு என்ன தெரியும்? ஏசி அறையில் அமர்ந்து கட்டுரை எழுதுவதை விட வேறு என்ன தெரியும்?
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.