ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Porn Reels Case: YouTubers Arrested Under Thug Act
10.3.2025
ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திவ்யா கள்ளச்சி என்ற யுடியூப் சேனல் நடத்தி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா 30, ஈரோட்டைச் சேர்ந்த கீழக்கரை கார்த்திக் என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் கீழக்கரை கார்த்திக் 30, என்பவரும் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ.2.5 லட்சத்தை திவ்யா எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். அதில் யுடியூபர்கள் திவ்யா , கீழக்கரை கார்த்திக் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரில் திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோரிடம் ஏ.டி. எஸ். பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி விசாரித்தனர். விசாரணையில் சித்ரா சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.
இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.