July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

1 min read

Adi Dravidian and tribal people in Tenkasi district can apply for Hotel Management Catering degree

11.3.2025
தென்காசி மாவட்டத்தில் தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் படித்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவருக்கு மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

o Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022 ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் பதின்மூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45% (சதவீதம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.300 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர் தர உணவகங்கள் விமானம் துறை. கப்பல் துறை மற்றும் சேவை துறைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். மேலும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.

இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், வட்டாட்சியர் அலுவலகம் 2வது தளம், தென்காசி என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்: 04633-214487 மூலமாக விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.

course

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.