June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 585 மனுக்கள்

1 min read

585 petitions at Tenkasi District People’s Grievance Redressal Day meeting

11.3.2025
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 585 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொண்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல்கிஷோர்அறிவுறுத்தினார்.

இந்தக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *