June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக அரசு ஊழியர் கைது

1 min read

Government employee arrested for selling secrets to Pakistan

15.3.2025
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணிபுரியும் ரவீந்திர குமார் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் முக்கியமான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய அரசு ஊழியர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

இதற்காக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர். பணம் அல்லது பெண் மூலம் காதல் வலையில் வீழ்த்தி (ஹனி டிராப்) அவர்களை கவர்ந்திழுத்து இதில் சிக்க வைக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில்தான் ரவீந்திர குமார் சிக்கினார்.
ரவீந்திர குமார், பேஸ்புக்கில் நேஹா சர்மா என்ற போலி பெயர் கொண்ட பெண்ணுடன் நட்பு கொண்டார். இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி. இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் சாட்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் நடந்துள்ளன.

படிப்படியாக, நேஹா சர்மா ரவீந்தரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆயுதத் தொழிற்சாலையின் ரகசியத் தகவல்களைக் கேட்கத் தொடங்கியுள்ளாள். அவள் மீது கொண்ட ஆசை காரணமாக, ரவீந்திரன் தொழிற்சாலையின் ரகசிய ஆவணங்களை அவருக்கு அனுப்பினார்.

தற்போது கைதுசெய்யப்பட்ட ரவீந்திர குமாரின் தொலைபேசியிலிருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.
அவற்றில் தொழிற்சாலையில் ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான உற்பத்தி அறிக்கைகள், இந்திய இராணுவத்திற்கும் ஆலை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்கள் அடங்கிய ரகசிய சந்திப்பு கோப்புகள், அரசு தொழிற்சாலைகளின் பங்கு பட்டியல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள் ஆகியவை அதில் அடங்கும்.

தனியுரிமைச் சட்டம் 1923 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ரவீந்திர குமாரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *