கேரள எல்லையில் பிடிபட்ட கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Ganja dealer caught at Kerala border arrested under Goondas Act
19.3.2025
தமிழக – கேரள எல்லையான புளியரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிக்கிய பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய சரகத்திற்குட்ட தாட்கோ நகரில் போலீசார் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தபோது அந்த காரில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அந்த நபரை கைது செய்து அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில்
காரில் கஞ்சா கொண்டு வந்த அந்த நபர் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் தினேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் கஞ்சா வியாபாரி தினேஷ் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார் .
அதனைத் தொடர்ந்து அந்த நபரைன செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.