அமர்சேவா சங்கத்திற்கு பேப்பர் பை தயாரிக்கும் இயந்திரம்
1 min read
Paper bag making machine donated to Amar Seva Sangha
20/3/2025
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு குற்றாலம் ரோட்டரி கிளப் சாரல் சார்பில் அதன் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ். முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பேப்பர் பை தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்படுத்தவும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு ஏதுவாகவும், தொழில் பயிற்சி பெறவும் பேப்பர் பை தயாரித்து அதன் மூலம் சங்கத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயரவும் பைல் மற்றும் பேப்பர் பை தயாரிக்கும் இயந்திரம் குற்றாலம் ரோட்டரி கிளப் சாரல் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது .
இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு குற்றாலம் ரோட்டரி கிளப் சாரல் சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர். எஸ்.முத்துராமன் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை கவர்னர் சேகர் ,செயலர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் அமர்சேவா சங்கத்தின் முதன்மை கணக்காளர் ராஜேஸ்வரன் வரவேற்று பேசினார், இந்த
நிகழ்ச்சியினை அமர் பவுண்டேஷன் நிர்வாகி சண்முகம் தொகுத்து வழங்கினார்.
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவர் தலைவர் எஸ். ராமகிருஷ் ணன் மற்றும் செயலர் எஸ்.சங்கர ராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குற்றாலம் ரோட்டரி கிளப் சாரல் நிர்வாகிகளால் அமர்சேவா சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் அமர் பவுண்டேசன் நிர்வாகி சண்முகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.