July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

போர் நிறுத்தத்திற்கு ரஷியா – உக்ரைன் சம்மதம்

1 min read

ரஷிய அதிபர் புதின்

Russia and Ukraine agree to ceasefire

20.3.2025
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் பேரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் பேசியதன் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷியா குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதன்படி இருநாடுகள் இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. இருநாடுகளும் மற்றவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ள செய்வதில் தான், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா “எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள்” என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இத்துடன் ரெயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில், “போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் படியாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது தான் இருக்க முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் எப்போது போர் நிறுத்த ஒப்ந்தம் அமலுக்கு வரும் என்று தெரியவரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.