ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தல்-4 பேர் கைது
1 min read
250 kg of tobacco products smuggled near Alankulam – 4 arrested
24.3.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்திய நான்கு நபர்களை கைது செய்த போலீசார் இரண்டு மினி லாரிகள் இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிளாஸ்டன் ஜோஸ் ஆகியோர்களின் உத்தரவின்படி, ஆலங்குளம் காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன், ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியவேந்தன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம், மு.நி.காவலர் ராமச்சந்திரன், ராஜேஷ், ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு தலைமைக் காவலர்கள் பாலமுருகன், மோகன்ராஜ், குமரேசசீனிவாசன், குருநாதகுரு, முதல் நிலைக் காவலர்கள் லிங்கராஜா, மகேஷ், காவலர் அயன்ராஜ் மற்றும் சைபர் க்ரைம் காவலர்கள் செளந்திரபாண்டியன், ஜேசுமரியஅந்தோணி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நெல்லை – தென்காசி மெயின் ரோட்டில் வேகமாக வந்த இரண்டு மினி லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர்.
சோதனையின் போது அந்த மினி லாரியில் 17 மூட்டைகளில் 250 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கீழப்பாவூர் பூ மாடன் என்பவரது மகன் முருகன் (வயது 33) அவரது சகோதரர் செல்வன்
(வயது 28) அயன் குறும்பலாப்பேரி பகுதியைச் சேர்ந்த குத்தாலிங்கம் என்பவரது மகன் ரத்தினசாமி (வயது 28) அதே பகுதியைச் சேர்ந்த இசைக்கு முத்து என்பவரது மகன் நவீன்குமார் (வயது 23) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் கேரளாவில் இருந்து மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி வந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்தது தெரிய வந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட ரெண்டு மினி லாரிகள் மற்றும் இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.