June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

அரசு டாக்சி சேவை விரைவில் அறிமுகம்-அமித் ஷா அறிவிப்பு

1 min read

Government taxi service to be introduced soon – Amit Shah announces

28.3.2025
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் “சஹ்கார் டாக்ஸி” (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேம்போது, “சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும்” என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *