மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
1 min read
President’s Rule in Manipur – Resolution passed in Lok Sabha
3.4.2025
மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நள்ளிரவு 2.30 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மணிப்பூர் விவகாரம் விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.