“அண்ணாமலை பணி பாராட்டத்தக்கது”- அமித்ஷா பாராட்டு
1 min read
Annamalai work is commendable: Amit Shah praises
11.4.2025
” தேசிய அளவில், கட்சிப் பணிகளுக்கு அண்ணாமலையின் திறமையை பா.ஜ., பயன்படுத்திக் கொள்ளும், ” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவராக பாராட்டத்தக்க வகையில், பல சாதனைகளை அண்ணாமலை செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாகட்டும், கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாகட்டும், அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பறியது.
அண்ணாமலையின் திறன்களை தேசிய அளவில் பா.ஜ., பயன்படுத்திக் கொள்ளும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா கூறியுள்ளார்.