ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம்- சுலோவாகியா பல்கலைக்கழகம் வழங்கியது
1 min read
President Draupadi Murmu awarded doctorate by Slovak University
11.4.2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார். நேற்று அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி, அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மேலும் நிர்வாகம், சமூக நீதிக்கு குரல் கொடுத்தல் மற்றும் உள்ளடக்கிய பணிகளுக்காக இந்தப் பட்டத்தை வழங்கியதாக பல்கலைக்கழகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, ‘தத்துவ ஞானி செயிண்ட் கான்ஸ்டன்டைன்சிரிலின் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தில் பட்டம் பெறுவது, மொழி, கல்வி மற்றும் தத்துவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அவர், கல்வி என்பது தனிநபர் அதிகாரமளிப்புக்கு மட்டுமின்றி, தேசிய வளர்ச்சிக்கும் ஒரு வழிமுறை என்றும் கூறினார்.