July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

திருச்சி சிவாவுக்கு கட்சி பதவி-முதல்-அமைச்சருடன் சந்திப்பு

1 min read

Trichy Siva meets with party chief minister

11.4.2025
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. விழாவில் மிக கீழ்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பொன்முடியிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து புதிய பொறுப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின். இந்தநிலையில், திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதிமாறன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு.. இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அங்கீகாரத்திற்கு நன்றி. கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். பொறுப்பு வரும் போது கடமையும் சேர்ந்து வரும். இனி என் செயலின் மூலமாக உணர்த்துவேன் என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.