இந்த ஆண்டு நிகழும் கிரகணங்கள்
1 min read
Eclipses occurring this year
14/4/2025
இந்த விசுவாவசு ஆண்டில் 2 சந்திர கிரகணங்கள், 2 சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன. இதில் 2 சந்திரகிரகணங்கள் மட்டும் தெரியும். அதன் விவரத்தை பார்க்கலாம்.
ஆவணி மாதம் 22&ந் தேதி (7.9.2025) ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்று இரவு 9.51 மணி முதல் இரவு 1.26 பூரட்டாதி நட்சத்திரத்தில் ராகு கிரஸ்தத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நடக்கிறது. இரவு 2.25மணிக்குத்தான் முழுமையயக கிரகணம் நிறைவடையும். இதில் கிரகணத்தின் மத்திமம் 11.41 மணியாகும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும்.
இந்த கிரகணத்திற்காக திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது நல்லது. அற்கு இரவு 10மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். – பவுர்ணமி சிராந்தம் செய்பவர்கள் மறுநாள் 8.9.2025 திங்கட்கிழமை செய்யலாம்.
புரட்டாசி மாதம் 5&ந் தேதி (21.9.2025) ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் நிகழ்கிறது. அன்று உத்திரம் நட்சத்திரம் கேது கிரஸதத்தில் இரவு 10.59 மணிக்கு ஆரம்பித்து 3.29 மணி வரை நிகழும். இரவு நிகழும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கனடா, அட்லாண்டிக் பகுதி, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாணம் ஆகியவற்றில் இந்த சூரிய கிரகணம் தெரியும்.
மாசி மாதம் 5ந் தேதி (17.2.2026) செவ்வாய்க் கிழமை சூரிய கிரகணம் நிகழ்கிறது-. அவிட்டம் நட்சத்திரம், ராகு கிரஸ்தத்தில் பிற்பகல் 3.26 மணி முதல் இரவு 7.57 மணிவரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதுவும் இந்தியாவில் தெரியாது. தென்ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் ஆண்டார்டிக்கா, இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தெரியும்.
மாசி மாதம் 19&ந் தேதி (3.3.2026) செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. பூரம் நட்சத்திரம், கேது கிரஸ்தத்தில் மாலை 3.19 மணிக்கு தொடங்கி மாலை 7.53மணிக்கு நிறைவடையும். இது இந்தியாவில் பகுதி சந்திரகிரகணமாக தெரியும்.