தமிழ் புத்தாண்டு பலன்கள்(வாக்கிய பஞ்சாங்கம்)
1 min read
Tamil New Year Benefits (Vakkiya Panjangam)
மேஷம்
இந்த விசுவாவசு ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் 11ஆம் இடத்தில் இருப்பதால் தொழில் சிறந்து விளங்கும். பொருளாதார வளம் சிறப்படையும். குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார் கேது உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருக்கிறார். இவை அனைத்தும் மிகுந்த நற்பலன்களை. ஆண்டின் இறுதியில்(6.3.2026) சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்திற்கு வருவது ஏழரை சனியின் ஆரம்பம். ஆனாலும் மற்ற கிரகங்களின் பலத்தால் சிறப்பான பலனை காணலாம்.26.4.2025 அன்று ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது அன்று கேது சாதனை பெற்ற இடத்திற்கு வந்தாலும் ராகு நன்மை தரும் இடத்திற்கு மாறுகிறார். குரு பகவான் 11/5/2025 அன்று மூன்றாம் இடத்திற்கு சென்றாலும் அவரது பார்வைகளால் நன்மை தருவார். மொத்தத்தில் இந்த ஆண்டு அரசு அதிகாரிகள் உயர் பதவி பெறுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறுவர். போலீஸ் மற்றும் ராணுவம் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள் வீர பதக்கங்கள் பெறுவர். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பார் விவசாயம் சிறப்பாக இருக்கும். பெண்கள் புத்தாடை ஆபரணங்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் உறவினர்கள் நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்
…..
ரிஷபம்
இந்த ஆண்டு பிற்பகுதி மிகவும் பல நன்மைகளை தர வல்லதாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ராசியில் இருக்கிறார். இது சுமாரான இடமாக இருந்தாலும் அவரது பார்வைகளால் நன்மை கிடைக்கும். 11/5/2025 அன்று அவர் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு சென்று பல்வேறு நன்மைகளை தருவார். எதிர்வரும் எந்த பிரச்சினைகளையும் முறியடித்து வெற்றியைத் தருவார். அதன்பின் 8.10.2025 அன்று கடக ராசிக்கு சென்றாலும் அவரது பார்வையால் அதிக நன்மை கிடைக்கும். சனி பகவான் தற்போது பத்தாம் இடத்தில் இருக்கிறார். அவர் 6.3.2026 அன்று 11ஆம் இடத்திற்கு வந்து உன்னத பலனை தருவார். தொழில் விருத்தியடையும். பொருளாதாரம் சிறப்படையும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் நல்ல பலனை பெறுவார்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் வருவார்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். ஜவுளி இரும்பு சிமெண்ட் எலக்ட்ரானிக் போன்ற வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் கணவன் மனைவியிடையே அன்பு நீடிக்கும் அன்பு பெருகும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
…..
மிதுனம்
இந்த ஆண்டு வளர்ச்சி வளர்முகமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் இருந்தால் சுமாரான பலனையை தந்திருப்பார் அவர் 11/5/2025 அன்று உங்கள் ராசிக்கு வருகிறார். அதன் பின் அவரது அனைத்து பார்வைகளாலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 8,10,2025 அன்று குரு அதிசாரம் பெற்று 2ம் இடம் செல்கிறார். இது மிகவும் சிறப்பான இடம். எடுத்த காரியம் வெற்றிஅடையும். சுபங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கலாம். உத்தியோம் சிறப்படையும். மாணவர்கள் வெற்றி, முன்னேற்றம் காண்பர். கேது பகவான் தற்போது 4ம் இடத்திலும் ராகு 10-ம் இடத்திலும் இருக்கிறார்கள். 26.4.2025 அன்று கேது உங்கள் ராசிக்கு மூணாம் இடத்திற்கு வந்து நன்மை தருவார். இறை அணுகூலம் கிடைக்கும். சனிபகவான் மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் தொழிலில் விருத்தி அடையும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்குரிய வருமானம் இல்லாமல் இருக்காது உறவினர்கள் ஓரளவு அனுசரணாக இருப்பார் உடல் நலம் சிறப்பாக இருக்கும். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்துக்களை வாங்குவார்கள.
…..
கடகம்
இந்த விசுவாவச ஆண்டு குருபகவானின் பலத்தால் சிறப்பாக தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தருவார் குறிப்பாக குடும்பத்தில் சுபங்களை தருவார் நகை புத்தாலை போன்றவை வாங்கலாம் சற்று முயற்சி செய்தால் வீடு மனை வாங்க வாய்ப்பு உண்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பாக இருப்பர். 11.5.2025 அன்று குருபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான இடம் தான் என்றாலும் 8.10.2025 அன்று குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசி உங்கள் ராசிக்கு வருகிறார். அதன்பின் அவரது பார்வைகளால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அதேபோல் கேது உங்களுக்கு தற்போது 3ஆம் இடத்தில் இருந்து முன்னேற்றத்தை தருவதோடு தெய்வ காரியங்களில் ஈடுபட வைப்பார். இந்த நன்மை 26/4/2025 வரை கிடைக்கும். தொழிலில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். யாரையும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். சிக்கனமாக இருப்பது நல்லது. 6.3.2026 அன்று அஷ்டமத்து சனி முடிவடையும். அதன்பின் சனிபகவானின் பார்வைகளால் நன்மை கிடைக்கும்..
….
சிம்மம்
இந்த விசுவாவசு ஆண்டு குரு பகவானின் அருளால் சீரான பலனை காணலாம், ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான இடம் என்றாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் அவர் 11/5/2015 அன்று உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்திற்கு வந்து எண்ணற்ற நன்மைகளை தருவார். இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி ஒரு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர், முயற்சிக்கு தகுந்த நல்ல மதிப்பெண் கிடைக்கும். 8.10.2025 அன்று அதிகாரம் பெற்று உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் குரு பகவான் வருகிறார் அதன் பின்பு சற்று முயற்சி எடுத்து எந்த தொழிலையும் செய்ய வேண்டி இருக்கும். சனி பகவான் சுமாரான இடத்தில் இருந்தாலும் உங்கள் உழைப்புக்கேற்ற பலனை தராமல் இருக்க மாட்டார். தொழிலில் அக்கறையும் இருக்கவும். யாரையும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது
…
கன்னி
இந்த விசுவாச ஆண்டு உங்களுக்கு பல்வேறு சிறப்புகளை அள்ளித்தரும் ஆண்டாக அமையும். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து எண்ணற்ற பலனை தருவார், மேலும் அவருடைய 10ம் இடத்துப்பார்வையும் சாதகமாக உள்ளது. இதனால் தொழிலில் விருத்தி அடையும். எடுத்த காரியம் வெற்றி அடையும். பணவரவு இருக்கும் வீடு மனை வாங்கலாம். சனி பகவான் 6.3.2026 அன்று 7ம் இடத்திற்கு மாறுகிறார். அதன்பின் அவரால் நன்மை தர இயலாது. ஆனாலும் 6,3,2925 ராகு 6ம் இடத்துக்குப்பிறகு 6ம் இடத்துக்கு வந்து அந்த பலனை தருவார். குருபகவான் தற்போது நல்ல பலனை தந்து கொண்டிருக்கிறார் அவரால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் குறிப்பாக 11.5.2025 அன்று குரு இடம்மாறினாலும் அவருடைய பார்வையால் நன்மை தருவார். வீடு மனை வாங்கலாம். இதனை அடுத்து 8.10.2025க்கு பின் அவர் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்திற்கு வந்து எண்ணற்ற பலனை தருவார். மாணவர்கள் சிறப்பாக முன்னேறி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். அரசியல்வாதிகள் அனுசரித்துப் போவது நல்லது எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம். கனவில் கணவன் மனைவியிடையே அன்பு மேலோங்கி இருக்கும்.
….
துலாம்
இந்த விசுவாவசு ஆண்டு வளர்முகமாக இருக்கும். நிழல் கிரகங்களான கேது-ராகுவால் ஆண்டு முழுவதும் நன்மைகள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் இடத்திற்கு ஆறாம் இடத்தில் இருந்து நல்ல பொருளாதார வளத்தையும் வளர்ச்சியையும் தருவார். வீடு மனை வாங்க அனுபவம் கூடிவரும். 6.3.2025 பின் ராகு சாதக மற்றும் இடத்திற்கு வந்தாலும் கேது உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்திற்கு சென்று நன்மைகளை தருவார். பொருளாதார பலம் தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும். சனி பகவான் தற்போது ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் ஆண்டில் பிற்பகுதியில் 6.3.2026 அன்று சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சென்று எண்ணற்ற பலனை தருவார். அதன்பிறகு தொழில் வளம் மேலும் முன்னேறும். குரு பகவான் 11.5.2025 முதல் 8.10.2025 வரை சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளை தருவார். அதன்பிறகு குருவனின் பார்வையால் நன்மை தருவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடக்கும். மாணவர்கள் அந்த காலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெறுவர் மொத்தத்தில் இந்த ஆண்டு சிறப்பாக அமையும்
….
விருச்சிகம்
தமிழ் புத்தாண்டான விசுவாவசு ஆண்டு தொடக்கம் உங்களுக்கு மிக மிக அனுகூலமாக இருக்கும் முன்னேற்றங்கள் பல இருக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் உங்களுக்கு நன்மை தந்து கொண்டிருக்கிறார். கேது உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தருவார் பொருளாதார வளம் இருக்கும். தொழில் சீராக இருக்கும். அதிகமாக உழைக்க வேண்டும். குரு பகவான் 11/5/2025 வரை சாதகமான இடத்தில் இருப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும் மாணவர்கள் கருவியில் சிறந்து விளங்குவார்கள் அதன் பின் 8.10.2025க்கு பிறகும் குருபகவான் நன்மை தருவார். இதனால் மாணவர்கள் விரும்பிய பாடத்தை பெறலாம் வீடு மனை வாங்கலாம் தொழில் செய்பவர்கள் அதிகமான முதலீடு வேண்டாம். சற்று அலைச்சல் அதிகரிக்கும் அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற இயலாமல் போகலாம். உறவினர்கள் வகையில் செலவு அதிகமாக்கும் வழக்கு போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது
….
தனுசு
இந்த ஆண்டு தொடக்கம் மிகவும் உன்னதமாக இருக்கும் குறிப்பாக சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்தில் இருப்பதால் எண்ணற்ற பலனை அள்ளித் தருவார், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் தொழில் விருத்தி அடையும். புதிய தொழிலை தொடங்கலாம். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பர். குரு பகவான் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் 11/5/2025க்கு பிறகு அவர் சுபங்களை அள்ளித் தருவார். வீடு மனை வாங்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தற்போது ராகு-கேது சுமாரான நிலையில் இருந்தாலும் 26/4/2025 அன்று ராகு உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்திற்கு வந்து பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். தொழிலில் சிறந்து விளங்க செய்வார். அரசியல்வாதிகள் பல்வேறு வெற்றிகளை குவிக்கலாம். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர் கலைத்துறையினர் நல்ல முன்னேற்றத்தை காண்பர் கணவன் மனைவியிடையே அன்பு மேலோங்கி இருக்கும
….
மகரம்
ஆண்டின் தொடக்கம் குரு பகவானின் பலத்தால் சிறப்பாக இருக்கும் சுபங்கள் நடைபெறும் வீடு மனை வாங்கலாம் உத்தியோகம் பார்ப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். 11/5/2025க்குள் நல்ல முன்னேற்றத்தை காணலாம். குரு பகவான் 8.10.2025 பிறகு மீண்டும் நன்மையை தருவார். சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருப்பது சுமாரான இடம் தான் என்றாலும் அவர் 6.3.2026 அன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு செல்கிறார். இதனால் ஏழைரை சனிகாலம் முடிவடையும். அதன்பின் எண்ணற்ற பலனை தருவார். ஆண்டு தொடக்கத்தில் ராகு மூன்றாம் இடத்தில் இருந்து நல்ல பலத்தை தருவார். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு பல்வேறு சிறப்புகளை தரும் அரசியல்வாதிகள் நல்ல முன்னேற்றத்தை தருவார். விவசாயிகள் முன்னேற்றம் பெறுவர். உறவினர்களால் நன்மை இருக்கும்
….
கும்பம்
இந்த ஆண்டு தொடக்கத்தை விட பிற்பகுதியில் சிறப்பாக இருக்கும் குருபகவான் 11/5/2015க்கு பிறகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு செல்கிறார் அதன்பின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, மனை வாங்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் பதவி உயர்வுக்கு வருவர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். 8.10.2025 வரை இந்த குதூகல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியில் இருந்தாலும் உங்கள் உழைப்பு தகுந்த பலனை கொடுக்க தவற மாட்டார். 6.3.2026 பின் சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு செல்கிறார். அதன் பின்பு அவருடைய கெடு பலன்களை குறைந்து நன்மைகள் ஓரளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆண்டு தொடக்கத்தில் சனி பகவானின் பார்வை மூன்றாம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதன் மூலம் உங்களுக்கு என்னத்த பலனை தருவார்.
….
மீனம்
ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறார் இது சுமாரான இடம் என்றாலும் அவரது அனைத்து பார்வைகளாலும் நன்மைகள் கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் சுபங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கலாம். அதுவும் 11/5/2025க்குள் இந்த நன்மைகளை தருவார். உத்தியோகஸ்தர்கள் இந்த காலத்தை பயன்படுத்தி முன்னேற்ற முன்னேற வேண்டும். வேலை அதன்பின் வேலைப்பொருள் சற்று அதிகரிக்கலாம். அதாவது 11/5/2025க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் இந்த காலகட்டத்தில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். அதற்கு ஏற்ற பலனை பெறலாம். 8.10.2025க்கு பிறகு குரு பகவான் ஐந்தாம் இடத்திற்கு வந்து எண்ணற்ற நண்பனை தருவார் சுபங்கள் நடக்கும். அதன்பின் மாணவர்கள் சிறப்பாக இருப்பர். 26.4.2025க்கு பிறகு கேது உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வந்து நன்மை தருவார். சனிபகவான் வேலைப்பளுவை கொடுத்தாலும் அவரால் உழைப்பு கேட்ட நன்மை கிடைக்கும். 6.3.2026 அன்று உங்கள் ராசிக்கு வருகிறார் அவரால் நன்மை அதிகம் நடக்க வாய்ப்பு இல்லை. அதே நேரம் அதிகமாக உடைக்க வேண்டியது இருக்கும். உழைப்பு தந்து வருமானம் கிடைக்காமல் இருக்காது.