July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கலெக்டர் தலைமையில் தமிழில் பெயர் பலகை கண்காணிப்பு கூட்டம்

1 min read

Tenkasi: District monitoring meeting on Tamil name boards in shops – Collector participates

18/4/2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் பிரதானமாக அமையப்பெற்றதை காட்சிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர்,தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் பிரதானமாக அமையப்பெற்றதை காட்சிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் அல்லாது பிற மொழியும் தேவைப்படும் பட்சத்தில் தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். பின்னர் ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிற மொழிகளில் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் பிரதானமாக அமையப்பெற்றதை காட்சிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக தொழிலாளர் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள். மாவட்ட அளவிலான வணிகர் சங்கங்கள், உணவக உரிமையாளர் சங்கங்கள், வேலையளிப்போர் சங்கங்கள் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர் சங்கப் பிரதிநிதிகள், பெரு வணிகர்கள். உணவு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள். கூட்டத்தை கூட்டி அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்பலகை அமைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வரும் 15.05.2025 ஆம் தேதிக்குள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பெயர்ப்பலகை கட்டாயமாக தமிழில் பிரதானமாக அமையப்பெற வேண்டும். 15.05.2025 ஆம் தேதிக்கு பின்னர், தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களால் வணிக நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழில் பெயர்ப்பலகை அமையப்பெறாத நிறுவனங்களின் மீது சட்டப்பூர்வமான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில். மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட வணிகர் சங்கப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.