June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா- கலெக்டர் தகவல்

1 min read

Patta for 5 years of residence on extraterritorial lands in Tenkasi district – Collector’s information

19.4.2025
தென்காசி.மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் தரிசு, கல்லாங்குத்து/பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை/புஞ்சை ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் 2 செண்ட் மற்றும் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 3 செண்ட்-க்குள் அரசு புறம்போக்கு நிலங்களான தீர்வை ஏற்பட்ட மற்றும் தீர்வை ஏற்படாத தரிசு, கல்லாங்குத்து/பாறை/கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை/புஞ்சை ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு ஆக்கிரமிப்பினை வரன்முறை செய்து பட்டா வழங்குமாறு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள் ஆதார் கார்டு, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு இரசீது, வீட்டுத் தீர்வை இரசீது, சமையல் எரிவாயு அடையாள அட்டை/வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் (30-04-2025)-தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *