தென்காசியில் கலைஞர் கைவினைத் திட்டம் துவக்க விழா
1 min read
Inauguration ceremony of the Kalaignar Craft Project in Tenkasi
20.4.2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற திட்டத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பபட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் “கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற திட்டத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நேற்று சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி, குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது.
“கலைஞர் கைவினைத்திட்டம்” கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும், கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கிலும் தொடங்கி வைக்கப்பட்ட உன்னத திட்டம். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50,000/-வரை மானியத்துடன் ரூ.3.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் அவர்களால் பல்வேறு திட்டங்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை நேரலை வாயிலாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், சங்கரன் கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஜெ.கவிதா, தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க உறுப்பினர்கள், கலைஞர் கைவினைத்திட்ட பயனாளிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.