தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை துவக்கவிழா
1 min read
Inauguration ceremony of new bus service in Tenkasi district
20/4/2025
தென்காசி மாவட்டத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்து, சங்கரன்கோவில் பணிமணையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் தரைத்தளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்குபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் . சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜாவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக் குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்து, சங்கரன்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் தரை தளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மேலாண் இயக்குநர் தசரதன். பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி) சரவணன். சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கவிதா, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா.சங்கர பாண்டியன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன் முத்தையா பாண்டியன், தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் எம் .திமான் ஒலி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.