கட்சியை விட்டு என்னை விலக்கி விடுங்கள் – மல்லை சத்யா
1 min read
Remove me from the party – Mallai Sathya
20/4/2025
மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை, எழும்பூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என முதன் முதலில் விரும்பியது நான்தான். மதிமுக நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் செயல்படவில்லை. என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.