தென்காசி ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Awareness program at Tenkasi railway station
22.4.2025
தென்காசியில் ரயில் பயணத்தின் போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ரயில்வே போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக இருப்பு பாதை காவல்துறை இயக்குனர், இருப்பு பாதை காவல்துறை தலைவர்,கனம் இருப்பு பாதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவுபடியும், இருப்பு பாதை காவல் உட்கொட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் அறிவுரை படியும்,ரயில் பயணத்தின் போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ரயில்வே போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையில் வைத்து பெண்கள், பெண் குழந்தைகளை, பாதுகாப்பது பற்றியும், ரயிலில் பயணம் செய்யும் பொழுது எவ்வாறு விழிப்புணர்வோடு செல்ல வேண்டும் என்றும், பாலியல் தொந்தரவு, திருட்டு, விபத்து சம்பந்தமான அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
மேலும் பெண்கள் ரயிலில் பயணம் செய்யும் பொழுது எவ்வாறு விழிப்புணர்வோடு செல்ல வேண்டும் என்றும், பாலியல் தொந்தரவு, திருட்டு, விபத்து சம்பந்தமான அறிவுரைகளையும் வழங்கி பெண் பயணிகளை வைத்து தென்காசி இருப்பு பாதை காவல் நிலையம் சார்பாக உதவி ஆய்வாளர்கள் எஸ்.கற்பக விநாயகம் ,மாரியப்பன், ரவிக்குமார், மற்றும் காவல் ஆளிநர்கள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர். முடிவில் தென்காசி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.