பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு
1 min read
Complete shutdown in Jammu and Kashmir to condemn Pahalgam attack
23.4.2025
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களும் வணிகர்களும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.