June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் பத்ம பூஷன் விருது; ஜனாதிபதி வழங்கினார்

1 min read

Actors Ajith, Balakrishna, Shekhar Kapur awarded Padma Bhushan; President presents

28.4.2025
நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷோபனா ஆகியோருக்கும், தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, இந்தி நடிகர் சேகர் கபூர் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் டெல்லியில் முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார்.
அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித் குமார்(வயது 53) இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். சினிமா தவிர்த்து கார் ரேஸிலும் அசத்தி வருகிறார்.
மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்டி ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா(64) தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எம்எல்ஏ.,வாகவும் உள்ளார்.
இந்தி சினிமாவின் இயக்குனரும், நடிகருமான சேகர் கபூர்(79) தமிழில் கமலின் விஸ்வரூபம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.