மதுரை விமானநிலையத்தில் கூட்ட நெரிசல்: தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு
1 min read
Crowd at Madurai airport: Case registered against Thaveka volunteers
5.5.2025
கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 1-ந்தேதி மதுரைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பலர் கூடியதால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி (தெற்கு), கல்லணை(வடக்கு) மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.