காஷ்மீர் எல்லையில் 12-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறல்-இந்திய ராணுவம் பதிலடி
1 min read
Indian Army retaliates to Pakistan’s violation of Kashmir border for 12th day
6/5/2025
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று இரவு குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜவுரி, மெந்தர், நவுசாரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய 8 பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.