June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

100 நாள் வேலை திட்டம்: 13-ந் தேதி மாற்றுத் திறனாளிகள் குறை கேட்பு முகாம்

1 min read

100-day work plan: Grievance camp for differently-abled persons on the 13th

5.5.2025
தென்காசி மாவட்டத்தில் 13.05.2025 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கடிதத்தின்
அதனடிப்படையில், மே 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவிருக்கும் குறைகேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் மே 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்க்கிழமை 13.05.2025 அன்று தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெறவிருக்கும் குறைகேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *