இந்தியா தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத நிலையங்களின் பட்டியல்
1 min read
List of 9 terror camps attacked by India
7.5.2025
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத நிலையங்களின் பட்டியல் குறித்த விவரம் பின்வருமாறு;-
- மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜே.எம்
- மார்கஸ் தைபா, முரிட்கே – LeT
- சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜே.எம்
- மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – எச்.எம்
- மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – LeT
- மர்கஸ் அப்பாஸ், கோட்லி – ஜே.எம்
- மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – எச்.எம்
- ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் – LeT
- சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் – ஜே.எம்