‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து ஜனாதிபதி முர்முவிடம் மோடி நேரில
1 min read
Modi meets President Draupadi Murmu and explains ‘Operation Sindoor’
7.5.2025
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார். இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி. விளக்கம் அளித்தார்.