கள்ளத்தொடர்பு வைத்த மனைவி கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது- உயர்நீதிமன்றம் தீர்ப்பு
1 min read
A wife who has an illicit relationship cannot receive maintenance from her husband – High Court ruling
21.5.2025
சண்டிகர் கீழமை நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு கணவன் மாதம் ரூ.4000 உதவித் தொகை (ஜீவனாம்சம்) கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தனது மனைவி உறவினர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதை சுட்டிக்காட்டி கீழ்மை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணவன் சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது எனக் கூறி கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.