மத்திய அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
1 min read
A low pressure area has formed in the central Arabian Sea.
22.5.2025
”கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது” என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. வடக்கு கர்நாடகா, கோவா கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.