பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று மணல் அள்ள கேரள அரசு அனுமதி!
1 min read
Kerala government allows river sand mining after ten years!
22.5.2025
கேரள மாநிலத்தில் ஆற்று மணல் அள்ளுவதை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அங்கீகரித்து அம்மாநில வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் ஆறுகளில் இருந்து மணல் எடுப்பது வரம்பை மீறியதால், 2016ம் ஆண்டு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த முடிவு, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆற்று மணல் அள்ளுவதை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அங்கீகரித்து அம்மாநில வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் ஆற்று மணலை சட்டப்பூர்வமாகவும் அறிவியல் ரீதியாகவும் அள்ளுவது குறித்து, உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆறுகளுக்கு ஒரு மாவட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆய்வு அறிக்கை அடிப்படையாக அமையும்.
- இந்த அறிக்கை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கேரளாவில் நடத்தப்பட்ட மணல் தணிக்கையிலிருந்து உள்ளீடுகளைக் கொண்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில், கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 32 ஆறுகளில் மணல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் 16 ஆறுகளில் மணல்கள் அள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், 15 ஆறுகளில், மணல் சுரங்கம் மூன்று ஆண்டுகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட உள்ள ஆறுகள் பட்டியல் வருமாறு:- - குளத்துப்புழா
- அச்சன்கோவில்
- பம்பா
- மணிமாலா
- பெரியாறு
- மூவாட்டுப்புழா
- பாரதப்புழா
- கடலுண்டி
- சாலியார்
- பெரும்பா
- வாழப்பட்டினம்
- ஸ்ரீ கண்டபுரம்
- மாகி