July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

மோடி தலைமையில் நிதிஅயோக் கூட்டம்; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

1 min read

Finance Commission meeting chaired by Modi; MK Stalin participates

24.5.2025
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் மோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்தினார். இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாசல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில்சந்தித்து பேசுகிறார். இதில், பள்ளி கல்வி துறை, மெட்ரோ ரெயில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த துறை சார்ந்த, தமிழகத்திற்கான நிதியை தருவது பற்றி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் பிரதமருடனான இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நிதி விடுவிப்பது பற்றி மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.