மன உளைச்சல்; ஒரு மாதமாக தூக்கமில்லை- அன்புமணி உருக்கம்
1 min read
I haven’t slept for a month.. I’m depressed – Anbumani Urukkam
24/5/2025
ராமதாசுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் பாமக தொண்டர்கள் மத்தியில் அன்புமணி உருக்கமாக உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த ஒரு மாதமாகவே தூக்கமில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன்.
நான் என்ன தவறு செய்தேன். இதுநாள் வரை ராமதாஸ் கூறியதை தான் செய்து வந்தேன். ராமதாசின் கனவை நிறைவேற்றுவது தான் என்னுடைய லட்சியம்.
ராமதாசின் கனவை நிறைவேற்ற பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்.
எதிரிகள் பாமகவிற்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.