எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min read
Pakistani terrorist shot dead while trying to infiltrate across border
24/5/2025
குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவரை நேற்று இரவு (மே 23) எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த பயங்கரவாதி இரவு நேரத்தில், சர்வதேச எல்லையைக் கடந்து ஊடுருவ முயற்சி செய்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையை மீறி அந்த பயங்கரவாதி ஊடுருவ முயற்சி செய்தார்.
இதையடுத்து, அந்த பயங்கரவாதி மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான் என எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில், பாகிஸ்தான் உளவாளி ஒருவரை பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். இவன் பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்தது விசாரணையில் அம்பலம் ஆனது.