குற்றாலத்தில் சீசன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்-எஸ்பி அரவிந்த் நேரில் ஆய்வு
1 min read
SP Arvind personally inspects season security preparations in Courtalalam
24.5.2025
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்குமா நிலையில், சீசன் கால கட்டங்களில் குற்றாலம் பகுதிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சீசன் நேரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கணகாணிப்பாளர் எஸ்.அரவிந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் ஆனந்தமாக குளிக்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, தென்காசி ஏ டி எஸ் பி,
டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்த நிலையில், சீசன் காலகட்டங்களில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான
பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.