தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா
1 min read
A grand festival organized by the DMK in Tenkasi South District
25.5.2025
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம் திப்பனம்பட்டியில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா, நான்காண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் திப்பனம்பட்டியில் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன். தென்காசி தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் கலைக் கதிரவன் ஆகியோர் தலைமையில், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், தமிழ்வாணன் ஆலடி அருணா, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, கடையம் சேர்மன் செல்லம்மாள். தென்காசி நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான ஆர். சாதிர், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை அனைவரையும் வரவேற்று பேசினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி,திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, கென்னடி, தலைமைக் கழக பேச்சாளர்கள் கடையநல்லூர் எம்.என். இஸ்மாயில், வெல்டிங் மாரியப்பன், ஆயிரப்பேரி முத்துவேல், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் நிகழ்ச்சியில் இளைஞர் அ ணி அமைப்பாளர் டி.ஆர். கிருஷ்ணராஜா, மாணவர் அணி அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ், ஒன்றிய திமுக செயலாளர்கள் கிழப்பவூர் சிவனு பாண்டியன், தென்காசி மேற்கு வல்லம் எம் திவான் ஒலி தென்காசி கிழக்கு ஆர்.எம். அழகு சுந்தரம், கடையம் மகேஷ் மாயவன், திமுக நகர செயலாளர்கள் கடையநல்லூர் எஸ். அப்பாஸ், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ..வெங்கடேசன், ஊர்மேல் அழகியான் சுப்பிரமணியன், சாக்ரடீஸ், மேலகரம் இ.சுடலை, பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், வடகரை தங்கப்பா என்ற முகமது உசேன், இலஞ்சி முத்தையா, பண்பொழி ராஜராஜன். முத்துக்குமார், பொன்சீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சமுத்திர பாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.