July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா

1 min read

India overtakes Japan to become the world’s 4th largest economy

25.5.2025
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்பின், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. நாம் நான்காவது பெரிய பொருளாதாரமாகி விட்டோம். 4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.340 லட்சம் கோடி) பொருளாதாரமாகி விட்டோம்.

ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது.

தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகள்தான் இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன.

திட்டமிட்டபடி, எண்ணியபடி உறுதியாக செயல்பட்டால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.