ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கொன்ற திருநங்கை
1 min read
Transgender woman kills young man who refused to give in to her desires
25/5/2025
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 35). இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நடைபாதையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புது வண்ணாரப் பேட்டை ஏ.சி.ஸ்கீம் சாலையில் ஜான்பாஷா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலை புது வண்ணாரப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் ஜான்பாஷா பலமாக தாக்கப்பட்டதில் இறந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண ராஜ் மற்றும் போலீசார் உடல் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திருநங்கைகள் சிலர் அதே பகுதி எம்.டி.பி. மைதானத்தில் இரவு நேரத்தில் வழக்கமாக வந்து செல்வது தெரிந்தது. விசாரணையில் அதே பகுதி தேசிய நகரை சேர்ந்த குகன் என்கிற மலயா (40) என்ற திருநங்கை, ஆசைக்கு இணங்க இணங்க மறுத்த ஜான்பா ஷாவை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து திருநங்கை மலயாவை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ஜான்பாஷாவின் சட்டை பையில் பணம் இருப்பதை திருநங்கை மலயா பார்த்து உள்ளார். பின்னர் ஆசைக்கு இணங்கு மாறு ஜான்பாஷாவை அழைத்ததாக தெரிகிறது. அனால் அவர் ஆசைக்கு இணங்க மறுத்து திட்டியதால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த திருநங்கை மலயா சரமாரியாக தாக்கி ஜான்பாஷாவை கீழே தாக்கினார். இதில் கழுத்து, இடுப்பு, வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே ஜான்பாஷா இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திருநங்கை மலயாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.