July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் மவுனசாமி மடத்தில் 6-ந் தேதி பட்டாபிஷேக விழா

1 min read

Coronation ceremony on the 6th at Maunaswamy Math, Courtallam

27.5.2025
குற்றாலம் மவுனசாமி மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிக்கு ஸ்ரீ சித்தேஸ்வரி பீட உத்திர பீடாபதியாக பட்டாபிஷேகம் சூட்டும் விழா வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

குற்றாலம் மவுனசாமி மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிக்கு ஸ்ரீ சித்தேஸ்வரி பீட உத்திர பீடாபதியாக பட்டாபிஷேகம் சூட்டும் விழா வரும் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு ஸ்ரீகணபதி பூஜை, புண்யாக வாசனம், தீஷா கிரகணம், பஞ்ச கல்ய சம்ஸ்காரம், அங்குரர்ப்பணம், ஸ்ரீநாடி கணபதி சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், ஒரு லட்சம் அருகம்புல் அர்ச்சனை பூஜை, ஸஹஸ்ர மோதக சமர்ப்பணம், ஜகத்குருவின் அமிர்த பாஷணம் நடைபெறுகிறது.

ஜூன் 3ம் தேதிகாலை 7.30 மணிக்கு பஞ்சாயுதன தேவதா மந்தர ஹோமம், பீடஸ்தித தேவதா ஹோமங்கள், ஸ்ரீசித்தேஸ்வரி தேவிக்கு 108 வலம்புரி சங்குகளால மகா சங்காபிஷேகம், ஸ்ரீதண்டாயுதபாணி, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு ஸ்ரீபாதாள பி;ரத்யங்கராதேவிக்கு சிறப்பு அபிஷேகம், ராகுகால பூஜை, ஸகஸ்ர மாஷா சர்க்கரை சமர்ப்பணம், 6 மணிக்கு ஸ்ரீசஞ்;சீவராய அனுமன் சுவாமிக்கு வெற்றிலை அர்ச்சனை, ஆயிரம் பழங்கள் சமர்ப்பணம், ஜகத்குருவின் அமி;ர்த பாஷணம் நடைபெறுகிறது.

ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு பஞ்சாயதன தேவதா ஹோமங்கள், ஸ்ரீ பீடஸ்த்த தேவதா ஹோமங்கள், ஸ்ரீயோக நரசிங்கர், ஸ்ரீசீதாதாமர், ஸ்ரீசந்தான கோபால ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், ஸ்ரீராதா கிருஷ்ணருக்கு லட்சம் துளசி தளம் கொண்டு அர்ச்சனை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஸ்ரீஸ்வேத காளி, ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகம், லட்சார்ச்சனை, ஸ்ரீ ஜகத் குருவின் அமிர்த பாஷணம் நடைபெறுகிறது.

ஜூன் 5ம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ குருசந்நிதி பூர்வ பீடாதிபதிகளின் பிருந்தாவனங்களுககு ஸ்ரீமகா ருத்ராபிஷேகம், 10 மணிக்கு ஸ்ரீ ஜகத்குருவின் திருக்கரங்களினால் மகா பூர்ணகுதி, 11 மணிக்கு இளைய பீடாதிபதியான உத்திர பீடாதிபதிக்கு கலசாபிஷேகம், மாலை 5 மணிக்கு ஸ்ரீ தத்தாத்ரேயஸ்வாமி, ஸ்ரீ ஆதிசங்கர், ஸ்ரீசாய் ஸவாமி, ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஸ்வாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், பூஜை, 6 மணிக்கு ஸ்ரீலலிதா, ஸ்ரீ கமேஸ்வர ஸ்வாமி திருக்கல்யாணம், ஸ்ரீ ஜகத் குருவின் அமிர்த பாஷணம் நடைபெறுகிறது.

ஜூன் 6ம் தேதி காலை 7.45 மணிக்கு குற்றாலம் சங்கரா சாரிய ஸ்ரீ சித்தேஸ்வர பீடாதிபதிகள் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மகா ஸ்வாமி திருக்கரங்களினால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிக்கு ஸ்ரீ சித்தேஸ்வரி பீட உத்திரபீடாதிபதியாக பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
குற்றாலம் மவுனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.